அடமானம் வைத்த காரை அபேஸ் செய்தவர் கைது

0 359
Stalin trichy visit

திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நியாமத்துல்லா(வயது 43). இவரிடம், மயிலாடுதுறையை சேர்ந்த சாதிக் என்பவர் தனக்கு சொந்தமான காரை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அடமானம் வைத்திருந்தார். அந்தக் காரை நியாமத்துல்லா தனது வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார்.

சம்பவத்தன்று அந்த காரை சாதிக் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நியாமத்துல்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாதிக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.