கஞ்சா விற்றவர் கைது
திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியில் கஞ்சா விற்பனை நடப்பதாக எடமலைப்பட்டிப்புதூர் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில் மில் காலனி பகுதிக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் அதே பகுதி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலன் (என்கிற) பூபாலன்(வயது 27) என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து பூபாலனை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் திருச்சி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். பூபாலன் மீது ஏற்கனவே கஞ்சா விற் றது தொடர்பாக 4 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.