4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலாளி கைது!

0 480
Stalin trichy visit

திருச்சி அருகே உள்ள கே.சார்தனூரை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி-வின்அரசி தம்பதி. இந்த தம்பதியின் 4 வயது மகள் அந்த பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தர். அப்போது கே.சாத்தனூரை சேர்ந்த ஆரோக்கிய சவர்தாஸ்(வயது 40). அந்த பகுதியில் வேலை செய்து வருவதாகவும் அவர் அந்த குழந்தையை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அந்த பகுதியில் மறைவான இடத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி வின்அரசிக்கு தகவல் கிடைத்ததும் இதுகுறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வின்அரசி புகார் செய்தார். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆரோக்கிய சவர்தாசை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.