ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவர் படுகாயம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியை அடுத்த வாழவந்தான் கோட்டை அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருபவர் ஜவகர்(வயது 42).
இந்நிலையில் இவர் தனது வீட்டு வளாகத்தின் அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றபோது எதிரே வாழவந்தான் கோட்டை கண்ணுசாமி மகன் முருகபூபதி(வயது 26) என்பவர் தனது மொபட்டில் அதி வேகமாக வந்து ஜவஹர் ஐ நேருக்கு நேர் மோதியதில் ஜவகர் தலை மற்றும் கை கால் பகுதிகளில் பலத்த காயமடைந்தார்.
இதில் சுயநினைவை இழந்த ஜவகர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.