திருச்சி மாவட்டம் சமயபுரம் அணுகு சாலையில் டிரெய்லர் டிரக் சக்கரங்களை திருடிய மூன்று பேர் கைது.போலீசார் விசாரணை .
மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர் சூரிய மூர்த்தி. இவர் 40 அடி நீளமுள்ள டிரெய்லர் டிரக்கை சமயபுரம் திருச்சி அணுகு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் வண்டியின் சக்கரங்களை மர்ம நபர்கள் கழட்டுவதை பார்த்த சூரியமூர்த்தி பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.பின்னர் சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த தனீஷ், ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டணம் பகுதியை சேர்ந்த ஜான்சன், அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை சேர்ந்த விஜி என்கின்ற விஜயகாந்த் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சூரிய மூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.