அனுமதியின்றி அரளை கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் : ஓட்டுநர் கைது

0 491
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அனுமதியின்றி அரளை கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

மண்ணச்சநல்லூரில் திருச்சி கனிம வளத்துறை தாசில்தார் ஜெயபிரகாசம், தனி வருவாய் ஆய்வாளர் சுமதி உதவி, புவியியலாளர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மண்ணச்சநல்லூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோனை செய்தனர். அதில் டிப்பர் லாரியில்அனுமதியின்றி பாடாலூரிலிருந்து
அரளை கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து லாரியை ஒட்டி வந்த டிரைவர் ஆகியோரை மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் லாரியை ஓட்டி வந்தார் பாடாலுரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன்(29)  என தெரிய வந்தது.பின்னர் மண்ணச்சநல்லூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.