வீட்டின் பூட்டை உடைத்து நகை-செல்போன் திருட்டு

0 355
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பவுன் தங்கச் செயின் ஒரு ஆண்ட்ராய்டு செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

புள்ளம்பாடி அருகே கல்லகம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்  விஜயகுமார்(42). நேற்று காலை 9 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலை விஷயமாக வெளியே சென்று இருந்தனர். பின்னர் 11 மணியளவில் திரும்பி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த இரண்டு பவுன் தங்கச் செயின் ஒரு ஆண்ட்ராய்டு செல்போனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.