திருச்சி தேசிய கல்லூரியில் விருது வழங்கும் விழா

0 948
Stalin trichy visit

திருச்சி தேசிய கல்லூரியின் விளையாட்டு துறை சார்பாக 10வது ஆண்டாக விருது வழங்கும் விழா 2022 கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சி தேசிய கல்லூரி விளையாட்டு துறை சார்பாக ஆண்டுதோறும் திருச்சியின் சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு விருது வழங்கி வருவது வழக்கம்.

அந்த வகையில் திருச்சியில் 2022-ம் ஆண்டிற்கான சமூக செயற்பாட்டாளர்களுக்கான விருது வழங்கும் விழா  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

நிகழ்வில் கல்லூரியின் செயலர் ரகுநாதன், கல்லூரி முதல்வர் சுந்தரராமன், கல்லூரியின் துணை முதல்வரும் விளையாட்டுத்துறை தலைவருமான பிரசன்ன பாலாஜி மற்றும் பேராசிரியர் குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.