துவாக்குடி ஜல்லிக்கட்டு போட்டி : அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தார்
திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்-மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாரம்பரியமிக்க துவாக்குடி ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்தார். அமைச்சர் முன்னிலையில் அரசு விதிகளுக்கு உட்பட்டு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் காயாம்பூ , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் மாரியப்பன் , கழக நிர்வாகிகளும், மாடுபிடி வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.