திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மேலஅரண் சாலையில் பழைய பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இதனை திருச்சி கோகினூர் தியேட்டருக்கு அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பாஸ்போர்ட் அலுவலகம் மாற்றப்பட்டது. தற்போது, பாஸ்போர்ட் அலுவலகம் தில்லை நகரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி பணிகள், புதை சாக்கடைத் திட்டம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மேல அரண் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது.
இதனை இன்று மாநகராட்சி சார்பாக பாதுகாப்பு இல்லாமல் இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு இல்லாமலும், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் பாஸ்போர்ட் அலுவலகம் இடிக்கப்படுவதால் அந்த சாலை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.