திருச்சி திருவானைகோவில் கல்லணை சாலையை பனையபுரத்தில் கடக்க முயன்றவட நாட்டு தொழிலாளி மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தியதை தொடர்ந்து பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரி பனையபுரம் கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவானைகோவில் கல்லணை சாலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் பைப்லைன் அமைக்கும் வேலை நடந்துவருகிறது.
அதில் வேலை பார்த்து வரும் வடநாட்டு தொழிலாளி கல்லணை திருவனைகோவில் சாலையை கடக்க முயன்றபோது கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மோதியதில் வடநாட்டில் தொழிலாளி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
அவரை பனையபுரம் கிராமத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 7ஆம் தேதி இரவு நேரவு தான் மினி லாரி மீது டாரஸ் லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு பனையபுரத்தில் திருவனைகோவில் கல்லணை சாலையில் பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பனையாரம் கிராம நிர்வாக அலுவலர் சுதா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இன்று மாலைக்குள திருவானைக்கோவில் கல்லணை சாலையில் பனையபுரம் பஸ் நிறுத்தத்தில் பேரிகார்டு வைக்கப்படும் என நம்பர் 1 டோல்கேட் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.