உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட திட்டம் 

0 325
Stalin trichy visit

தி.மு.க. மாநில இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை வெகு சிறப்பாக நடத்திடுமாறு திருச்சி தெற்கு மாவட்டக்கழகப் பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

திமுக இளைஞர் அணிச்செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளாகிய 27-11-2021 அன்று திருச்சி தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்களும், அனைத்து நிர்வாகிகளும், ஒன்றிணைந்து வெகு சிறப்பாக கொண்டாடி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.