திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இக்கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். எப்போதும் மாா்கழி மாதத்தில் நடைபெறும் இந்த விழா நிகழாண்டில் காா்த்திகை மாதத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாளான நாளை இரவு 7 மணிக்கு கா்ப்பகிருஹத்தில் திருநெடுந்தாண்டகம் தொடங்குகிறது. இதன் முழு விவரத்தையும் கீழ்வரும் அட்டவனையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

