திருச்சி விமான நிலையம் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி, மதுரை, சென்னை, கோவை ஆகிய 4 விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் எல்லா பயணிகளை பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையை காட்டிலும் கூடுதலாக அதிக பயணிகள் 14 நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பயணிகள் அதிகமாக வருகிறார்கள். இன்று சிங்கப்பூரிலிருந்து 2 விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளது, இதில் 663 பயணிகள் வந்துள்ளனர், அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் எல்லோருக்கும் நெகட்டிவ் வந்துள்ளது. 663 பயணங்களின் விலாசங்களை சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்பு, வருவாய்துறை போன்ற பல்வேறு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஒரு வார காலத்திற்கு தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளி நடமாட்டங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். இவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கு சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, நகராட்சிதுறை நடவடிக்கை எடுத்துவருகிறது. 7 நாட்களுக்குப்பிறகு அவர்களுக்கு மீண்டும் சோதனை செய்து அவர்களுக்கு நெகட்டிவ் வந்த பிறகு அவர்கள் வெளியில் நடமாடலாம். நான்கு விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்து நெகட்டிவ் வந்தவுடன் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ஹைரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 8 சதவீதம் பேருக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம், அவர்களுக்கு அரசு சார்பில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகள் கட்டணம் செலுத்த உள்ளோம்.
வரும் பயணிகள் ஏழ்மை நிலையில் இருந்தால் அவர்களிடம் பணம் வசூலிக்காமல் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படும். யாருக்காவது பாசிட்டிவ் என கண்டறியப்பட்டால் ஏற்கனவே இருக்கிற கொரோனா வார்டில் அனுமதிக்கக்கூடாது அவர்களுக்கென்று தனி பிரத்தியேக வார்டு அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்க வேண்டும். தீவிரமாக கண்காணித்தால் மட்டுமே பரவலை தடுக்க முடியும். கோவை, சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் வேகமாக அதிக வீரியத்துடன் பரவக்கூடியது. ஒருவ்வொரு பயணிகளிடம் பக்குவமா எடுத்துகூறி ஆர்டிபிசிஆர் சோதனை செய்து கொண்டு காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

சென்னை, கோவை, மதுரையை விட திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆர்டிபிசிஆர் சோதனை திருச்சியில்தான் குறைந்த நேரத்தில் செய்து முடிவுகள் கொடுக்கப்படுகிறது தமிழகத்தில் 6 மாவட்டங்கள் தடுப்பூசி போடப்படாமல் பின் தங்கியிருக்கிறது. வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், மதுரை, மயிலாடுதுறை இரண்டாவது தடுப்பூசி போடுவது சுணக்கம் இருக்கிறது . இதற்கு தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதுரையில் 477, சென்னையில் 500க்கும் மேற்பட்டோர் இதுவரைக்கும் தொடர்ச்சியாக தமிழகத்தில் 3000 பேருக்கு ஆர் டி பி சி ஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடாமல் சான்றிதழ் வாங்கியவர்கள் யார் சான்றிதழ் கொடுத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்டிபிசிஆர் சோதனையில் 700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நேற்று 900 ரூபாய் வாங்கிக்கொண்டு ரசீது தரவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது இனிமேல் அதற்கு ரசீது வழங்கப்படும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்குவது செயல்படுத்தவில்லை மத்திய அரசு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனை செய்த பின்பே நெகட்டிவ் என்ற வந்த உடனே வெளியே அனுப்ப வேண்டும் என்று கூறி உள்ளது. இது ஒமைகிரானை தடுக்கும் முயற்சிதான். நீட்டில் 1500 சீட்டு கூடுதலாக வந்துள்ளது இந்த தடவை கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.