திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சூச்சு உடையார்(வயது 50). இவர் பாலக்கரை காஜா பேட்டையில் தங்கி, துணி சலவை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் வேலை முடிந்து டி.வி.எஸ். டோல்கேட் நோக்கி திருச்சி-புதுக்கோட்டை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் முடுக்குபட்டி காலனி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பின்னால் வந்த தனியார் கூரியர் நிறுவன சரக்கு வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.