வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் அம்மன் திருவீதி உலா கோலாகலம்

0 397
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் தடைபட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 24 ம்தேதி பூச்சொரிதழ் விழாவுடன் துவங்கியது. கடந்த 1 ம்தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினசரி மண்டகப்படி நிகழ்வு மண்டகப்படி காரர்கள் சார்பில் நடைபெற்று வருவதால் ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு அவதாரங்களில் அலங்கரிக்கப்பட்டு அன்னம், காமதேனு, மயில், சிம்மம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி ராஜவீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். இதேபோல் 6 ம் நாள் மண்டகப்படியான இன்று அம்மன் ஆதிபராசக்தி அவதார திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு காமதேனு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. வழியெங்கும்  மக்கள் ஆங்காங்கே அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து  வழிபட்டனர்.
முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா மே 15ம் தேதியும், வேடபரி விழா 16 ம்தேதிம் நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.