2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய் கதி என்ன?

0 275
Stalin trichy visit

வாத்தலை காவிரி ஆற்றில் இறங்கிய பெண் மாயம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை முக்கொம்பில் உள்ள காவிரி ஆற்றில் குடும்பப் பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்ள தனது இரு மகன்களுடன் காவிரி ஆற்றில் இறங்கிய பெண் மகன்கள் கரைக்கு வந்த நிலையில் தாய் மாயமானார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா தெற்கு இலந்தக் கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி 33 வயதான அங்கம்மாள் இவர்களுக்கு 11 வயதான செல்வகுமார் மற்றும் 8 வயதான சிவசங்கர் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த 25ஆம் தேதி திண்டுக்கலில் இருந்து பெட்டவாய்த்தலையில் உள்ள தனது பெரியம்மா விஜயா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது இரண்டு மகன்களையும் அழைத்து வந்துள்ளார். பெட்டவாய்த்தலை செல்வதற்கு முன்பாக முக்கொம்பில் இறங்கி உள்ளார். பின்னர் முக்கொம்பில் உள்ள நடுக்கரைக்கு சென்றவர் தற்கொலை செய்து கொள்வதற்காக அங்குள்ள காவேரி ஆற்றில் தனது இரு மகன்களையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் இறங்கி உள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது சுகாதாரித்துக் கொண்ட இரு மகன்களும் தாயை இழுத்துள்ளனர். ஆனால் அவர் தண்ணீரின் ஆழமான பகுதிக்கு சென்றதால் மகன்கள் தப்பி கரைக்கு வந்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற அங்கம்மாள் திடிரென மாயமானார்.பின்னர் மகன்கள் தன் தாய் தண்ணீரில் மாயமானது குறித்து அங்கு உள்ள பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வாத்தலை காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தேடினர்.ஆனால் மாயமான அங்கமாளை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் மீட்பு பணியை நிறுத்தினர். இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான அங்கமாளை தொடர்ந்து தேடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.