உடல்நலக்குறைவால் பெண் விஷம் குடித்து தற்கொலை

0 246
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்தவர் கோவிந்தன் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 31). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சரஸ்வதிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும் என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து, மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மனவிரக்தி அடைந்த சரஸ்வதி சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதைகண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.