அதிவேக கார் டூவீலரில் மோதியதில் பெண் உயிரிழப்பு

0 118
voc

திருச்சி மாவட்டம், மாடக்குடி சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 28). இவரது மனைவி சாந்தி(23). கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில், திருச்சி- சென்னை புறவழிச்சாலை திருவானைக்கா ( தாகூர் தெரு) பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டையிழந்து தாறுமாறாக ஓடி மகேஷ் சென்ற இருசக்கரவாகனத்தில் மோதி, சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கம்பியையும் உடைத்துக்கொண்டு அணுகுசாலையில் பாய்ந்தது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சிறிது நேரத்தில் சாந்தி இறந்தார். மகேஷ் மற்றும் குழந்தை ஆகியோர் காயமடைந்தனர். கார் சாலையின் தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு அணுகாசாலையில் பாய்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தகாரில் திருச்சி பாலக்கரையை சேர்ந்த அகமதுல்லா(23), தென்னூரை சேர்ந்த சேக்பரி(27), உள்ளிட்டோர் பயணித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த இஷான்தீன் (26) காரை ஓட்டியுள்ளார். விபத்து நடந்த போது, அணுகு சாலையில் பிற வாகனங்கள் ஏதும் செல்லாததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!