தனியார் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம்

0 330
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 24 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியில் க்ஷவையம்பட்டி சூர்யா நினைவு அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் சூர்யா பாராமெடிக்கல் கேட்டரிங் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சிக்கு கல்லூரியின் தாளாளர் நாகலட்சுமி தலைமை வகித்தார். ஈஷா யோகா மைய தன்னார்வலர் சரவணகுமார் யோகா பயிற்சி அளித்தார். பயிற்சியில் 124 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் தங்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் தனது கனவுகளை வெற்றி பெறச் செய்ய இயலும் ஆகவே உடலையும் மனதையும் இணைத்து தான் செய்கின்ற செயலில் நூறு சதவீதம் கவனமுடன் செய்வதற்கு யோகா பயிற்சிகள் நமக்கு துணை புரியும் என்று அறக்கட்டளையின் தலைவர் சூர்யா சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.