சாலை விபத்தில் இளைஞர் பலி. 3 பேர் காயம்

0 624
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலையில் மோட்டார் பைக்கில் வந்த இளைஞர்கள் பாலத்தில் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.3 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகா வடக்கு கொளக்குடி வன்னியர் தெருவை சேர்ந்தவர் பூரா சாமி. இவருடைய மகன் 21 வயதான சரத்குமார். இவரும் இவருடைய நண்பர்களானா அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா தழுதாழை மேடு காலனி தெருவைச் சேர்ந்த திலகர் மகன் 19 வயதான ஆகாஷ், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுகா வடக்கு கொளக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் 21 கதிர்,மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் 21 வயதான மணிமாறன் ஆகியோர் மோட்டார் பைக்கில் திருச்சி எம் ஐ டி கல்லூரி அருகில் கபடி போட்டியில் விளையாடுவதற்க்காக மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தில் எதிர்பாராதமாக மோட்டார் பைக் மோதி விபத்துள்ளானது. இதில் சரத்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடன் வந்த மூன்று நண்பர்களும் காயத்துடன் உயிர்த்தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.