கொரோனா தொற்றால் இறந்து போவோரின் உடல்களை எவ்வித தயக்கமின்றி நல்லடக்கம் செய்யும் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் மனிதநேய பணி
கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போகும் நோயாளிகளின் உடல்களை எவ்வித தயக்கமின்றி நல்லடக்கம் செய்யும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் …கொரோனோ இரண்டாவது அலை உலகம் முழுவதும் ஒரி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லும் பலரில் சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சிலர் இறப்பது தொடர்கதையாக உள்ளது.கொரோனோவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த உறவினர்களே தொடுவதற்கு அச்சப்படும் நிலையில் திருச்சியில் எஸ் டி பி ஐ கட்சியினர் தொடர்ந்து அவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் திருச்சியை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய எஸ்.டி.பி.ஐ கட்சியினரிடம் உதவி கேட்ட நிலையில் திருச்சி சுப்ரமணியபுரம் கிளையின் தலைவர் PKM பாஷா தலைமையில் சென்ற குழு உடனடியாக பிரேதத்தை கைப்பற்றி நல்லடக்கம் செய்தனர்.