தனியார்மயக்கொள்கையை கண்டித்து தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் இடைவேளை ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ( எஸ்.ஆர்.எம்.யூ./ ஏ.ஐ.ஆர்.எப்) பொன்மலை கோட்டம் சார்பில் தொழிலாளர் விரோத செயலான மத்திய அரசின் தனியார்மயக்கொள்கையை கண்டித்து இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே உற்பத்தி பராமரிப்பு பணிகளை தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது.
ரயில்வே நிலையம், ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே பணிமனை வளாகங்களை ஆர்.எல்.டி.ஏ. மூலம் விற்கக்கூடாது. 47 பாதுகாப்பு உற்பத்தி பணிமனைகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றி 76 ஆயிரம் மத்திய அரசு பாதுகாப்பு துறை ஊழியர்களின் நிரந்தர வேலையை பறிக்கக்கூடாது. இ.டி.எஸ்.ஓ. அவசர சட்டம் மூலம் பாதுகாப்பு துறை ஊழியர்களின் வேலை நிறுத்த உரிமையை பறிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்