சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை

0 572
Stalin trichy visit

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு அறிவித்தப்படி பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் 108 குத்து விளக்கு பூஜை நடைபெறும் என அறிவித்தனர்.. அதன்படி பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் குத்துவிளக்கு பூஜையை இணை ஆணையர் கல்யாணி தொடங்கி வைத்தார் அதன் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும், அதில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், ஆதார் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று பணம் செலுத்தும் போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேற்கண்ட பொருட்கள் விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பூஜையில் புதிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.