திருச்சி ரயில் நிலையத்தில் 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

0 298
Stalin trichy visit

வட மாநிலங்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் ரயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி செல்லபடுகிறதா? என ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சையில் இருந்து திருச்சி வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த ரயிலில் ஒரு பை இருந்தது.

அந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 16 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவற்றை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.