அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது

0 368
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள அடைக்கலம்பட்டியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக துவரங்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துணை ஆய்வாளர் செல்லப்பா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மினி லாரி, டிராக்டர்களில் முக்கண் பாலத்தை சேர்ந்த கலையரசன்(வயது 25) மற்றும் செந்தில்குமார்(வயது 26) ஆகிய இருவரும் மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து வாகனங்களையும் மணலுடன் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.