மனவேதனையில் எலிபேஸ்டை தின்று நர்ஸ் தற்கொலை!

0 433
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூமணி. இவர்களது மகள் சத்யபிரியா(வயது 18), நர்சிங் படித்துவிட்டு வீட்டில் இருந்துவந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி அண்ணாதுரைக்கும், பூமணிக்கும் கருத் துவேறுபாடுகாரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணாதுரை கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இதனால் மனவேதனையில் இருந்த சத்யபிரியா, எலிபேஸ்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சத்யபிரியா இறந்தார். இது குறித்து பூமணி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.