நேரு நினைவு கல்லூரியில் கெமிக்கல் பொருட்களை தயாரித்தல் குறித்து 2 நாள் பயிற்சி; 11ம் தேதி தொடங்குகிறது!

0 365
Stalin trichy visit

திருச்சியில் உள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் வீடு மற்றும் தொழிலுக்குப் பயன்படும் கெமிக்கல் பொருட்களை தயாரித்தல் பற்றி இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியினை தொழில் முனைவோரும், இளையத் தலைமுறையினரும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur) அன்றாடம் வீட்டிற்கு தேவைப்படும் கெமிக்கல் பொருட்களை எவ்வாறு தயாரிப்பது மற்றும் இண்டஸ்ட்ரியல் கெமிக்கலை எப்படி தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் மற்றும் வருமானத்தை பெருக்க இன்றிமையாத விஷயங்களை நேரு நினைவுக் கல்லூரி கற்றுக் கொடுத்து வருகிறது. குறிப்பாக, தொழில் முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், நேரு நினைவு கல்லூரியின் பணிஇன்றியமையாதது.

2 நாள் பயிற்சி (2 days training)
இதன் ஒருபகுதியாக, தொழில்முனைவோராக மாற விரும்புவோரை ஊக்குவிக்கும் வகையில், வீடு மற்றும் தொழிலுக்குப் பயன்படும் கெமிக்கல் பொருட்களை தயாரித்தல் பற்றி இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் வரும் 11.05.2022 மற்றும் 12.05.2022 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி முகாம் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

இப்பயிற்சியில் கற்று தரப்படும் கெமிக்கல்ஸ்கள் மற்றும் அதன் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Domestic Chemicals:
1. Hand Sanitizer,
2. Detergent Liquid,
3. Detergent Powder,
4. Dishwash Liquid,
5. Dettol (Antiseptic Liquid),
6. Cumin Oil (Phenyle Base),
7. Colin (Glass Cleaner Liquid),
8. Soap Oil,
9. Oma Water
Industrial Chemicals:
1. Car Wash Liquid,
2. Furniture Wood Polish,
3. Office Gum,
4. Cutting Oil

ஆர்வமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம்செலுத்தி பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 8610183269 என்றத் தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். நேரு நினைவு கல்லூரியின் இந்த முயற்சி தொழில் முனைவோராக விரும்புவோர், தங்களது வருமானத்தைப் பெருக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.