கத்தியைகாட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது

0 323
Stalin trichy visit

திருச்சி உறையூர் மருதாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது39). சம்பவத்தன்று உறையூர் பங்களிதெரு பழைய பேப்பர் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உறையூர் ஸ்ரீ்நிவாசா நகரைச் சேர்ந்த சுடலைமணி(27), காளிமுத்து(57), விஜயகுமார்(40) ஆகியோர் சக்திவேலிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர். இவர்கள் 3 பேரையும் உறையூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருச்சி தென்னூர் காமராஜ் நகர் சலீம்(23) என்பவரிடம் ஸ்ரீரங்கம் சிங்கர் கோவில் பகுதியை சேர்ந்த மாரி(20), கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.