அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் அறிவுறுத்தலின்படி அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வனஜா(அலகு I) மற்றும் சபிதா பேகம்(அலகு II) ஆகியோர் நாட்டு நலப்பணித் திட்ட நாள் மற்றும் 75-வது சுதந்திர ஆண்டு விழாவிற்காக மரக்கன்று நடும் விழாவை ஏற்பாடு செய்தனர்.
அய்மான் கல்லூரி இயக்குனர் எம்.எம்.ஷாகுல் ஹமீது வரவேற்புரையாற்றினார். இதில் கல்லூரி முதல்வர் சுஹாசினி எர்னஸ்ட் கலந்து கெண்டு நம் வாழ்வில் மரத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு சிறு உரை நிகழ்த்தினார். இதில் கல்லூரிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.