ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் 40 புன்னை மரக்கன்றுகள் நடப்பட்டன
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பிச்சாண்டார் கோவில் பகுதியில் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 1008 மரக்கன்றுகள் நடப்பட்டன.


அதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே ஸ்ரீநம்பெருமாள் வசந்தமண்டபம் நந்தவனததில் ஈசான்ய மூலையில் அர்ச்சகர் சுந்தர்பட்டாரால் பூஜை நடத்தப்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் தனசெ.மாரிமுத்து ஸ்ரீரங்கம் கோயில் தலவிருட்சமான புன்னைமரக்கன்றை நட்டு வைத்தார்.

ஸ்ரீ நம்பெருமாள் வசந்த மண்டபம் நந்தவனம் மற்றும் ஆயிரங்கால் மண்டபம் மேற்கு புறம் ஆகிய இரண்டு இடங்களில் ஐம்பது புன்னை மரக்கன்றுகள் நடத்திட்டமிட்டு இன்று முதற்கட்டமாக இன்று 40 புன்னை மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, மண்டல இணை ஆணையர் அலுவலக மேலாளர் ஹரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
