வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அழைத்து செல்ல வருபவர்கள் தாமதமாக வரவும்; விமான நிலைய அதிகாரி தகவல்

0 434
Stalin trichy visit

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் புதிய கொரோனா விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் தன்ராஜ் தொரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் திருச்சி விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் தெரிந்த பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுவர்.

ஏனைய நாடுகளில் இருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். சிங்கப்பூரில் இருந்து வருபவர்களை வரவேற்க வரும் உறவினர்கள் 4 மணி நேரம் தாமதமாக வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறி உள்ளார். அதன்படி நேற்று சிங்கப்பூரில் இருந்து 2 விமானங்களில் வந்த 282 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.