ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தலுக்கு 74 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

0 320
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
வையம்பட்டி, மருங்காபுரி, துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 13வது வார்டு மற்றும் லால்குடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருமாந்தூர், கீழ்அரசூர், கொன்னை ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 2 கிராம பஞ்சாயத்து தலைவர், 19 கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 24 பதவிக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் வரை 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இறுதி நாளான நேற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட 27 பேர், கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 4 பேர், கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 19 பேர் என மொத்தம் 54 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 24 உள்ளாட்சி பதவிகளுக்கு 74 பேர் போட்டியிடுகின்றனர். வாக்கு பதிவு அக்டோபர் 9ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 12ம் தேதி, பதவி ஏற்பு 20ம் தேதியும் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.