திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள முத்து நகரை சேர்ந்தவர் பிச்சை(வயது 38). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மொபட்டில் பெட்ரோல் போடுவதற்காக புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.
அப்போது முசிறி பிரிவு ரோட்டில் இருந்து புறவழிச் சாலையில் எதிரே வந்த செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசியின்(35) என்பவர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பிச்சை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.