மின்சாரம் பாய்ந்து மாற்றுத்திறனாளி பெண் பலி

0 261
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள திரணியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் ராஜலட்சுமி(வயது 55). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாற்றுத்திறனாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில் நேற்று ராஜலட்சுமி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்கசிவு இருந்த கம்பியை தொட்டதாக தெரிகிறது.

இதில் மின்சாரம் தாக்கி ராஜலட்சுமி பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் குறித்து அப்பகுதியினர் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.