விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டைகள்; விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு

0 241
Stalin trichy visit

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட நிலையான இயக்க செயல்முறைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு அவர்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட, கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வருகின்ற 15.02.2022 வரை பெறப்படவுள்ளது.

அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிஷான் அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்தினை தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 15.02.2022-க்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.