கிணற்றில் பிணமாக மிதந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமி

0 316
Stalin trichy visit

திருச்சி பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ரவி இவரின் மகள் சிவரஞ்சனி (வயது 11). மனவளர்ச்சி குன்றியவர் மற்றும் வாய் பேச முடியாதவர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிவரஞ்சனியை திடீரென காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் திருச்சி செசன்ஸ் கோட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காணாமல் போன சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பெரியமிளகுபாறை நாயக்கர் தெரு பகுதியில் உள்ள சேகர் என்பவர் வீட்டில் உள்ள கிணற்றில் சிவரஞ்சனியின் உடல் மிதந்து உள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனவளர்ச்சி குன்றிய சிறுமி சிவரஞ்சனி அடிக்கடி திடீரென காணாமல் போனதாகவும், பின்னர் போலீசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.