2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

0 536
Stalin trichy visit

திருச்சி இ.பி.ரோடு ஜெகஜோதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது 42). இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 33). இவர் திருச்சி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி தனது 2 குழந்தைகள் சுப்புலட்சுமி (வயது 13), ராகினி (வயது 6) ஆகியோரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது கணவர் கணேசமூர்த்தி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.