போலீசார் கொடி அணி வகுப்பு
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. முசிறி டிஎஸ்பி அருள்மணி தலைமையில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில், போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.