தி.மு.க. வேட்பாளர் மீது பண மோசடி புகார் தெரிவித்து கலெக்டர் ஆபீசில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

0 305
Stalin trichy visit

திருச்சி பொன்மலைப்பட்டி வஉசி தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் இவர், தனது தாய் ஜெயாவுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திடீரென தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மோகன்ராஜை தடுத்து நிறுத்தி, ஆசுவாசப்படுத்தினர்.

பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், நண்பர் ஒருவருடன் இணைந்து மாநகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டேன். 2016ல் கொடுக்க வேண்டிய பணத்தை எனது நண்பர் தரவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு வந்தேன். அந்த நண்பர் இப்போது நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.