விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை; பெரும்பாலும் தி.மு.க.வினரே வெற்றி!
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இத்தேர்தல் மூலம் 398 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில், 61.36 சதவீத ஓட்டு பதிவானது. ஓட்டுகள் பதிவான மின்னணு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டு இருந்தன.
20 இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 7 மையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி அளவில் கலெக்டர் சிவராசு முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட்டு, முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அவை முழுமையாக எண்ணப்பட்டதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் வார்டு வாரியாக எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் ஆங்காங்கே அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் தி.மு.க.வினரே வெற்றி பெற்று வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. கோட்டத்திற்கு 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வீதம் 8 பேர் இருக்கிறார்கள். எனவே, ஒரே நேரத்தில் 8 வார்டுகளின் வாக்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுபோல நகராட்சி, பேரூராட்சிகளில் தலா 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.