ஒரு வாக்கு வித்தியாசத்தில் நாம் தமிழர் கட்சியை வீழ்த்திய பெண்!

0 404
Stalin trichy visit

திருச்சி கூத்தைப்பார் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே வெற்றிபெற்றது. எதிர்த்து நின்ற பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்த நிலையில், 3வது வார்டு வேட்பாளர் வெற்றிச்செல்வி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கண்ணன் என்பவரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக 14, மதிமுக 1, CPM 1, CPI 1, காங்கிரஸ் 1 வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் 18 வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், வெற்றி பெற்றவர்களில் 11 பேர் பெண் வேட்பாளர்கள், 7 பேர் ஆண்கள் எனவே பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை கூத்தைப்பார் பேரூராட்சியில் பெண்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.