பிரபல ஆடிட்டரின் கார் டிக்கியில் வைத்திருந்த 16 பவுன் நகை அபேஸ்!

0 386
Stalin trichy visit

திருச்சி உறையூர் ராமலிங்கநகர் ஞானம் காலனி 2வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன். பிரபல ஆடிட்டர். இவரது மனைவி இந்திராணி(வயது 77). ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த சில தினங்களுக்கு முன் கோவை சென்ற தம்பதி அங்கிருந்து கடந்த 20ம் தேதி திருச்சிக்கு வந்தனர். வரும் வழியில் தில்லைநகர் 5வது கிராசில் காரை நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சாப்பிட்டனர்.

இதையடுத்து வீட்டுக்கு சென்று கார் டிக்கியில் இருந்த பொருட்களை எடுத்தனர். அப்போது கார் டிக்கியில் ஒரு பையில் வைத்திருந்த 16 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து தில்லைநகர் போலீசில் சுவாமிநாதன் மனைவி இந்திராணி புகார் செய்தார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிந்துநதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தில்லைநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.