காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தல்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் மாநிலத்தலைவர் இதயராஜன், மாநில செயல் தலைவர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொது செயலாளர் முத்துசாமி, மாநில பொருளாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்கம், திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்கம், முதுநிலை திருக் கோவில் பணியாளர் சங்கம், திருக்கோவில் தொழிலாளர் யூனியன், திருக்கோவில் தொழில் நுட்ப பணியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் செயல் அலுவலர்களின் பதவி உயர்வுக்கு ஆணையரால் கோரப்படும் ரகசிய கோப்பு பராமரிப்பு செய்யப்பட வேண்டும் என்பதனை திரும்ப பெற வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அறங்காவலர் பணியிடத்திற்கு பட்டியலை சார்ந்த மற்றும் பட்டியலை சாராத நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.