மோசடி வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது!

0 305
Stalin trichy visit

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் மற்றும் உடமைகளை வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையில், தேடப்பட்டு வரும் குற்றவாளி (எல்ஓசி) என ஒருவரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேல் ஆயக்குடி யாதவர் தெருவை சேர்ந்த கணேசன் மகன் வேல்முருகன் (வயது 33) என்பதும்,

இவர் மீது கடந்த 2019ல் ராமநாதபுரம் மாவட்ட எமனேஸ்வரம் காவல் நிலைய போலீசார் மோசடி வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தலைமறைவானதும், தேடப்படும் குற்றவாளி என ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி அனைத்து விமான நிலையங்களுக்கு எல்ஓசி எனப்படும் நோட்டீஸ் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து எமனேஸ்வரம் போலீசாருக்கு ஏர்போர்ட் போலீசார் தகவல் அளித்தனர். அதன் பேரில் திருச்சி வந்த போலீசார் வேல்முருகனை கைது செய்து அழைத்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.