திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை ரோட்டில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 35 வயது நபர் ஒருவர் தற்காலிக ஊழியராக (கம்பவுண்டர்) பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு அரசு மருத்துவமனை நோயாளிகள் அறைக்குள் நுழைந்த தற்காலிக ஊழியர், சிகிச்சையிலிருந்த பெண்ணிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிகிச்சை பெற்ற பெண் மற்றும் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இது சம்பந்தமாக விசாரணை நடத்திய அரசு மருத்துவமனை நிர்வாகம், அத்துமீறிய தற்காலிக ஊழியரை பணி நீக்கம் செய்து எச்சரித்து அனுப்பினர்.