திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் போலீசார் திருவெறும்பூர் அருகே காவேரி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, ஆனந்தராஜ்(வயது 33) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்ததையடுத்து அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 350 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.