செயின் பறிப்பில் மூதாட்டி காயம்; 7 பவுனை பறிகொடுத்த சோகம்!

0 276
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் அக்ரஹாரத்தில் வசிப்பவர் சுசீலா(வயது 70). இவர் சம்பவதன்று வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே நடந்து வந்த மர்மநபர் சுசீலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்பிலான தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு சற்று தள்ளி நிறுத்தி இருந்த பைக்கில் தப்பியுள்ளார்.

இதில் சுசிலாவின் கழுத்து மற்றும் காதுகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மூதாட்டி சுசீலாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.