“சென்னையில் இருந்து ஓடிவந்த சிறுமி திருச்சியில் மீட்டு” பெற்றோரிடம் ஒப்படைப்பு!
புதுக்கோட்டை புறநகர் கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருபவர் மனோகர். இவர் சென்னையில் இருந்து புதுக்கோட்டை சென்ற பேருந்தில் பணிக்கு சென்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் பேருந்தில் ஏறினார். அந்த சிறுமி திருச்சிக்கு டிக்கெட் எடுத்து பயணம் செய்தார். மேலும் அருகில் இருந்த பெண் பயணியிடம் பள்ளியில் இருந்து ஓடி வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து ஓட்டுனர் மனோகர் மற்றும் டிரைவர் அந்த சிறுமியின் தந்தை முத்துமணிக்கு
செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி கூறும்போது, நான் சென்னையில் ஒரு விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியில் காபி எஸ்டேட் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பெற்றோரை பார்ப்பதற்காக பள்ளியில் விடுமுறை கேட்டதற்கு அவர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் சென்னையில் இருந்து வந்து விட்டேன் என்றார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.