43வது வார்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்; கவுன்சிலர் ந.செந்தில் ஏற்பாட்டில் நடந்தது!

0 319
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 43-வது வார்டு கவுன்சிலர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தினார். இதில் தனது 43-வது வார்டு மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் பர்மா காலனி பூங்காவிலும், மலையப்ப நகர் அம்பேத்கர் மக்கள் மன்றத்திலும், பிளோமினால்புரம் பள்ளிக்கூடத்திலும், காவேரி நகர் ஆதித்தனார் சமுதாய கூட்டத்திலும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். இதேபோல்

பொன்முத்து நகரில் கருவேலம் மரங்கள் அதிகமாக இருப்பதை அகற்றும் விதமாக பணிகளை மேற்கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பர்மா காலனி கிரவுண்டை சீரமைப்பு செய்து செம்மைப்படுத்தும் பணியும் நடைபெற்றது. அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.